மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Thursday, 25 August 2016

தமிழ்மொழிக் கருத்துணர்தல் - இறுதிநேர விளக்கம்/ மாதிரிகள்

அன்பான ஆசிரியர்களே/மாணவர்களே,

பல ஆண்டுகள் தமிழ்மொழி ஆறாம் ஆண்டு ஆசிரியராகவும், தமிழிமொழிப் பயிற்றுனர், தமிழ்மொழியில் திறமிகு (Guru Cemerlang) பதவியை வகிப்பதாலும் இத்தளத்தைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இதனைக் கொண்டு மலேசியாவிலுள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியும் வருகிறேன். இன்னும் சில நாட்களில் தேர்வெழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆசிரியரின் மனமார்ந்த வாழ்த்துகள். பதறாமல் இச்சோதனையை நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்க்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இத்துடன், தமிழ்மொழிக் கருத்துணர்தலில் மாணவர்கள் கடைசி நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியத்தைச் சுருக்கமாக எழுதியுள்ளேன். வாசித்துப் பயன்பெறவும். நன்றி

கே.பாலமுருகன்


பதிவிரக்கம் செய்வதற்கு இந்த லின்கை அழுத்தவும். to download pdf copy:

https://www.mediafire.com/?stykqkafl8svutv

Saturday, 20 August 2016

தன் வரலாறு: நான் ஒரு பள்ளிக் காலணி


முன்னுரை

                என்னை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து செல்வார்கள். மாணவர்களின் பாதங்களில் முள் குத்தாமல் இருக்க நான் பாதுகாப்பாக இருப்பேன். நான் தான் ஒரு பள்ளிக் காலணி.அறிமுகம்

       என் பெயர் ஸ்பார்க்”. நான் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக இருப்பேன். எனக்கு இரண்டு தனித்தனியான உடல்கள் இருக்கும். என் உடலின் மேல் பகுதியில் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள் இருக்கும். அதில் கயிற்றைக் கோர்த்து என்னை இறுக்கிக் கட்ட முடியும். மாணவர்களின் கால்களை விட்டு எங்கும் போகமலிருக்க அப்படிக் கட்ட வேண்டும்.

பிறப்பு/ செய்யப்பட்ட விதம்

               நான் கோலாலம்பூரிலுள்ள ஸ்பார்க் காலணி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னை மாட்டுத்தோலால் தயாரித்தார்கள். நான் கண்கவரும் வகையில் அழகாகக் காட்சியளிப்பேன். என்னுடன் என்னைப் போலவே பல நண்பர்கள் பிறந்தார்கள்.  என்னை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து முழுமையாக அடைத்தார்கள். இருள் என்னைச் சூழந்து கொண்டது.

பயணம்

       எங்களையெல்லாம் பெட்டி பெட்டியாகக் கனவுந்தில் ஏற்றினர். கரடு முரடான ஒரு பாதையில் அக்கனவுந்து சென்றது. பின்னர், எங்களை ஏற்றிச் சென்ற கனவுந்து ஒரு காலணி கடைக்கு வந்து சேர்ந்தது. 

விற்பனை

அக்கடைக்காரர் எங்களையெல்லாம் ரிங்கிட் மலேசியா 4000 காசோலையைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டார்.  கடைக்காரர் என் மீது ரிங்கிட் மலேசியா 50.00 என்ற விலை அட்டையை ஒட்டினார். என்னைக் கடைக்கு வருபவர்கள் வாங்குவார்கள் என நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன். ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு செல்வந்தர் மாணவர்களுக்கு அன்பளிப்பாக  வழங்குவதற்காக  ரிங்கிட் மலேசியா 800.00 வெள்ளிக் கொடுத்து என்னையும் இன்னும் சில நண்பர்களையும் வாங்கிச் சென்றார். நாங்கள் ஒரு பெரிய காரின் மூலம் தமிழ்ப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 


எஜமான்

     அப்பள்ளியின் தோட்டக்காரர் எங்களைக் காரிலிருந்து இறக்கி மண்டபத்தில் அடுக்கி வைத்தார். எல்லாம் மாணவர்களும் என் அழகைக் கண்டு வியந்தனர். எனக்கு வெட்கமாக இருந்தது. அந்தச் செல்வந்தர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு எங்களை அங்குள்ள 20 மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். மேடையில் இருந்த மேசையிலிருந்து எங்களை ஒவ்வொருவராக எடுத்து மாணவர்களிடம் வழங்கினார்.

          குமுதன் என்ற 5ஆம் ஆண்டு மாணவன் என்னைப் பெற்றுக்கொண்டான். என்னை அவன் மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்தான். என் உடலின் வெண்மையைக் கண்டு வியந்தான். என் உடலை அவன் தொடும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது. அவனுடைய காலுக்கு மிகப் பொருத்தமானவனாகத் திகழ்ந்தேன். 

பயன்பாடு

       அன்றிலிருந்து அவன் என்னைப் பள்ளிக்கு அணிந்து சென்றான். அவன் என்னை அணிந்ததும் அவனுடைய கால்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். சாலையில் நடக்கும்போது என் மீது சேறும் அழுக்குகளும் படாமல் பாதுகாத்தான். வாரம்தோறும் என் உடலில் வெள்ளைச் சாயத்தைப் பூசுவான். என் மேனி புதிய அழகுடன் மிளிரும். அவன் என்னை மாலையில் பந்து விளையாடவும் பயன்படுத்தினான். அன்றாடம் மாலையில் என்னை அணிந்துகொண்டு பந்து விளையாடச் செல்வான். அவன் பந்தைப் பலம் கொண்டு உதைக்கும்போது என் உடல் நடுங்கிப் போய்விடும்.

         
அனுபவம்

    ஒரு நாள் குமுதன் பள்ளியின் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் என்னை அணீந்து கொண்டு கலந்து கொண்டான். எனக்கு முதலில் ஓடுவதற்குப் பயமாக இருந்தது. சுடும் வெயிலில் என் உடல்கள் சூடு தாளாமல் உஷ்ணம் ஆகின. நான் எரிச்சலைத் தாங்கிக் கொண்டு என் எஜமானரின் வெற்றிக்காகப் போராடினேன். குமுதன் அந்தப் போட்டியில் முதல்நிலையில் வெற்றி பெற்றான். என்னை அணிந்து கொண்டு அவர் பரிசை வாங்கும்போது எனக்கும் பெருமையாக இருந்தது.

தற்போதைய நிலை


        சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய முன் வாய் கிழிந்துவிட்டது. எப்பொழுதும் வாய் பிளந்தே காணப்பட்டேன். குமுதன் நடக்கும்போது எதிரில் கிடக்கும் கற்களை அப்படியே விழுங்கிக் கொள்வேன். ஆதலால் அவன் என் மீது கோபமுற்றான். பின்னர், என் வாயைத் தைத்து அணிந்தான். இருந்தபோதும் நாளாக நாளாக என் தோல் அதன் சக்தியை இழந்து காணப்பட்டது. எப்பொழுதாவது திடலில் காற்பந்து விளையாட மட்டும் அவன் என்னை அணிந்து வருகிறான். உடலெல்லாம் கருமையடைந்து துர்நாற்றம் வீச நான் அவனுக்காக்க் கடுமையாக உழைத்து வருகிறேன்

ஆக்கம்: கே.பாலமுருகன்

Monday, 25 July 2016

தமிழ்ப்பள்ளிகளுக்கான இலக்கண - செய்யுள் மொழியணிக்கான விளக்கவுரை - 2016 (கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு)

நன்றி: கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு, கல்வி அமைச்சு. Terima Kasih Bahagian Pembangunan Kurikulum, Unit Bahasa Tamil.

ஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான இலக்கணம், செய்யுள், மொழியணிக்கான விளக்கவுரை- கல்வி அமைச்சு, 2016.to download Buku Panduan Tatabahasa, seyyul dan Mozhiyani SJKT:

https://www.mediafire.com/?5f5znbsh65la7mr