மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday 9 September 2013

யு.பி.எஸ்.ஆர் தயார்நிலை

தமிழ் மொழி தாள் 2. ( 11.09.2013)

12.15 pm to 1.30pm

நேர ஒதுக்கீடு மிகவும் முக்கியம். திறந்த முடிவு கட்டுரைக்குப் புள்ளிகள் அதிகம் என்பதால் அதில் நேரத்தைக் கொஞ்சம் அதிக செலவிடுவது அவசியம். அடுத்ததாக சிறுகதை பகுதியாகும். இறுதியாக இருக்கும் 10 நிமிடத்தில்கூட வாக்கியம் அமைத்துவிடலாம். 

திறந்த முடிவு கட்டுரை : குறைந்தது 40 நிமிடங்கள் 

சிறுவர் சிறுகதை (வழிகாட்டிக் கட்டுரை) - 25 நிமிடங்கள்

வாக்கியம் அமைத்தல் : 10 நிமிடங்கள்

இஃது ஓர் ஆலோசனை மட்டுமே. வாக்கியம் அமைத்தலை நீங்கள் கடைசியாகக்கூட செய்யலாம், காரணம் இறுதியாக 10 நிமிடங்கள் இருந்தாலும் வாக்கியம் அமைத்தலைச் செய்ய முடியும். ஆனால், இறுதி 10 நிமிடங்களில் அவசர அவசரமாகத் திறந்த முடிவு கட்டுரையைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தாலும் நேர்த்தியில்லாமல் போக வாய்ப்புண்டு. ஆகவே, முதலில் தாள் கிடைத்ததும் திறந்த முடிவு கட்டுரை பகுதியைச் செய்ய முயற்சிக்கவும். அந்தப் பகுதியில்தான் புள்ளிகள் அதிகம்.

சிறுகதைக்கு அதிக நேரம் செலவழித்து, இறுதியில் 30 புள்ளிகளுக்கான பகுதியில் நேரப்பற்றாகுறையால் மாணவர்கள் புள்ளிகள் இழக்க நேரிடும். இது போன்ற தவறுகளைக் களையவே இந்த ஆலோசனை. வெற்றி நிச்சயம்.

நாளை யு.பி.எஸ்.ஆர் தேர்வை எழுதவிருக்கும் அனைத்துத் தமிப்பள்ளி மாணவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள். பயமின்றி துணிச்சலுடன் சோதனையை எதிர்க்கொள்ளவும். வெல்க.

உங்கள் ஆசிரியர்: கே.பாலமுருகன்

Saturday 7 September 2013

நான் ஒரு சட்டை : தன்கதை & கற்பனை கட்டுரை வழிகாட்டி நூலிலிருந்து ஒரு பகுதி

அனைத்துத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளிவரவிருக்கும் என்னுடைய தன்கதை & கற்பனை கட்டுரை தொடர்பான வழிகாட்டி நூலின் ஒரு மாதிரி கட்டுரையை இங்கே இணைத்துள்ளேன். என் அனுமதியின்றி மறுபிரசுரம் செய்வதோ அல்லது சரியான மூலத்தைக் குறிப்பிடமால் சுரண்டல் செய்வதும் கடுமையான குற்றமாகும். எந்தப் புத்தகம் எந்த அகப்பக்கத்திலிருந்து யாரிடமிருந்து பெற்றீர்கள் என்ற தகவலுடன் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நேர்மைக்கு மிக்க நன்றி.

தன்கதை தொடர்பான பல்வேறான குழப்பங்கள் நாடு முழுக்க இருக்கின்றது. விரைவில் வெளிவரும் இந்த நூல் அனைத்துக் குழப்பங்களைத் தவிர்க்கும்.

கே.பாலமுருகன் ( 0164806241)








Thursday 5 September 2013

தன்கதை: அமைப்பும் மாற்றமும்

யு.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கவனத்திற்கு, தன்கதை: எல்லாம் பொருள்களும் இறுதியில் குப்பை மேட்டில்தான் கிடக்கும். கொஞ்சம் மிஞ்சினால் கால்வாய். அடுத்ததாக ஏற்றுமதி செய்யப்படும் எல்லாம் பொருள்களும் சீனக் கடைகளுக்குத்தான் கொண்டு செல்லப்படும். அதுவும் கண்ணாடி பேழையை எங்கள் காலத்திலிருந்து இன்னும் விட்டு வைக்கவில்லை. தெய்வங்களே, கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். சிறுவர்களின் எல்லைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள். உங்களால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை என்பதற்காக, குப்பை மேட்டையும், கால்வாயையும், சீன முதலாளிகளையும் கண்ணாடி பேழைகளையும் சட்டமாக்காதீர்கள், கட்டாயமாக்காதீர்கள்.

கற்றுக் கொள்வதிலும் பெற்றுக்கொள்வதிலும் வயதும் அனுபவமும் மிகப்பெரிய அகங்காரங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. சிறியவர்களிடமிருந்து பெறுவதையும் அனுபவம் குறைவானவர்களிடடமிருந்து கற்றுக்கொள்வதையும் பெரிய கௌரவக் குறைச்சலாகப் பார்க்கப்படுகிறது. இறுதியில் பாதிப்பிற்க்குள்ளாகுவது மாணவர்கள்தான். 1. கட்டுரையில் உரையாடலைப் பயன்படுத்துவது எங்கனம் சாத்தியம்? தன்கதை என்பது வாழ்க்கை வரலாறு. பொருளின் வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாக மட்டுமே எழுத முடியும். 2. கட்டுரையில் பின்னோக்கு உத்தி எங்கனம் பயன்படுத்த இயலும்? உத்தி என்பது கதைக்குரியது. வசனம்/உரையாடல் என்பதும் கதையில் பாவிக்கக்கூடியது. இதை இரண்டையும் கட்டுரையில் எழுதுமாறு காலம் காலமாகச் சொல்லித் தருகிறோம் என்பதற்காக அதனை மாற்ற முடியாது பிழையாகச் சொல்லிக்கொடுத்தாலும் பரவாயில்லை ஆனால் அகங்காரங்களை விட்டுக்கொடுக்க முடியாது என இவர்கள் பிடிக்கும் முரடு யாரைப் பாதிக்கப் போகின்றது? தொடர்பிற்கும் விவாதத்திற்கும்: 0164806241

Wednesday 28 August 2013

சிறுவர் சிறுகதை எழுதும் பயிற்சிப் பட்டறை - கலைவாணி தமிழ்ப்பள்ளி



இன்று (28.08.2013) மாலை 2 மணி 

முதல் 5 மணி வரை பாடாங் 

லெம்புவில் இருக்கும் கலைவாணி 

தமிழ்ப்பள்ளியில் சிறுவர் சிறுகதை 

எழுதும் பட்டறையை

 வழிநடத்தினேன். 59 மாணவர்கள் 

ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இதே பள்ளியில்தான் மாணவர்கள் 

மத்திய நான் பேசத் துவங்கியதும். 

2006ஆம் ஆண்டு கல்லூரியில் 

படித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே கற்பனைவளம் தொடர்பாகப் 

பேசுவதற்காக இப்பள்ளிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இப்பொழுதும் 

மீண்டும் 7 வருடம் கழித்து அதே பள்ளியின் மண்டபத்தில் பேசியது 

மகிழ்ச்சியாக இருந்தது.


Friday 23 August 2013

ஒரே நாள் இரண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி: மலக்கோவ் தமிழ்ப்பள்ளி & ஜாவி தமிழ்ப்பள்ளி

காலையிலேயே 8மணிக்கு ஜாவி தமிழ்ப்பள்ளியில் தேர்வு வழிகாட்டிப் பட்டறையைத் தொடங்கினேன். 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒரு சில மாணவர்கள் ஆர்வத்துடன் காணப்பட்டனர்.










பினாங்கு லாடாங் மலக்கோவ் தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி 2013. இந்தப் பட்டறையில் மொத்தம் 25 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதுவரை எந்தப் பள்ளியிலும் இல்லாமல், இப்பள்ளியில்தான் தலைமை ஆசிரியர் கடைசிவரை இருந்து பட்டறையில் கலந்துகொண்டார். மகிழ்ச்சியாகவும் இருந்தது. மாணவர்களைக் கேள்விக் கேட்குமாறு அவ்வப்போது கூறினார்.





Tuesday 20 August 2013

சிறுவர் சிறுகதை ஒரு வழிகாட்டி - ஆசிரியர்களின் கவனத்திற்கு

மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு, கீழ்கண்ட கட்டுரையைப் பதிவிறக்கம் செய்து வாசிக்கவும். மாணவர்களுக்குத் தவறான தகவல்கள் போய் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் நாம் அக்கறையாக இருக்க வேண்டும். யு.பி.எஸ்.ஆர் சோதனைக்கு இன்னமும் எத்தனையோ நாட்கள்தான் உள்ளன. ஆகவே விரைந்து செயல்படுவோம். நன்றி.

ஆசிரியர் கே.பாலமுருகன்






திறந்த முடிவு கட்டுரைக்கான புள்ளி அமைப்பு

1. பத்தி - பத்தி அமைப்பு முறைக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இப்பகுதியில் பத்திகள் முறையாகவும் சரியான அளவிலும் இருக்க வேண்டும். குறைந்தது 7 பத்திகளாவது இருத்தல் வேண்டும். ஒரு பத்தியில் 3 - 5 வாக்கியங்கள் இடம் பெறலாம்.

2. வாக்கியம் - வாக்கியம் அமைத்தல் என்பது கட்டுரைக்கான அடிப்படையாகும். மாணவர்கள் கட்டுரையில் அமைத்திருக்கும் வாக்கியங்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஒரு வாக்கியம் குறைந்தது 5 சொற்களுக்கு மேல் இருக்க வேண்டும்.

3. சொல்வளம் - கட்டுரையில் சொல்வளம் என்பது முக்கியமானது. கலைச்சொற்கள், அருஞ்சொற்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டுரை எழுதிதல் அவசியம்.

4. நிறுத்தற்குறிகள் - கட்டுரையில் நிறுத்தற்குறி பயன்பாட்டிற்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. முற்றுப்புள்ளி, காற்புள்ளி போன்றவற்றை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

5. எழுத்துப்பிழைகள் - எழுத்துப்பிழைகள்/இலக்கணப் பிழைகள் கட்டுரையில் எழுதுதல் கூடாது. புள்ளிகள் குறைக்கப்படும். எழுத்துப்பிழைகள் குறைவாக இருப்பின் இந்தப் பகுதியில் மாணவர்களுக்குப் புள்ளிகள் அதிகமாகக் கிடைக்கும்.

6. கருத்து - திறந்த முடிவு கட்டுரையில் கருத்துகள்தான் மிக முக்கியம் வாய்ந்தவையாகும். ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தது 5 கருத்துகள் இடம் பெறுதல் அவசியம் ஆகும். அந்தக் கருத்துகள் ஒவ்வொன்றும் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

முதன்மை கருத்து - துணைக்கருத்து - எடுத்துக்காட்டு

ஒரு சொல் கட்டுரையாக இருந்தாலும், தன்கதையாக இருந்தாலும் புள்ளிகள் இப்படித்தான் வழங்கப்படுகின்றன. வடிவக் கட்டுரைகளுக்கு மட்டும் வடிவத்திற்குத் தனியாகப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்: கே.பாலமுருகன் (தமிழ் மொழி சிறப்பு ஆசிரியர்)

Monday 29 July 2013

Percubaan UPSR negeri kedah 2013 : Bahasa Tamil Kertas 2 (தமிழ் மொழி முன்னோட்டத் தேர்வு கெடா மாநிலம்)

கீழ்காணும் வாக்கியங்களை அமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: தனி வாக்கியமாக இருத்தல் வேண்டும், குறிப்புச் சொல் அல்லது விளக்கச் சொல் கட்டாயம் வாக்கியத்தில் இடம்பெற வேண்டும்.



வழிகாட்டிக் கட்டுரையை சிறுவர் மையமாக வைத்து யோசித்து எழுதவும். கற்பனையாற்றல்மிக்கவையாக இருக்கட்டும். அந்த மாணவி என்ன நினைக்கிறார் என்பதைப் பூர்த்தி செய்து கதையை வழிநடத்தவும். இப்படத்தின் முடிவு என்னவாக இருக்கும்? ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் என்னைத் தொடர்புக் கொண்டு தெரியப்படுத்தலாம். இப்படத்திற்கான கதைக்கும் எப்படி 16-20 புள்ளிகள் பெறுவது என்பதைப் பற்றி சொல்கிறேன். (ஆசிரியர் கே.பாலமுருகன் : 0164806241)

Percubaan UPSR negeri kedah 2013 : Bahasa Tamil Kertas 1

தாள் 1 தமிழ் மொழி: கெடா மாநிலம். தாள் ஒன்றில் மாணவர்கள் கேள்வியைக் கவனமாகப் படிக்க வேண்டும். முதலில் கேள்வியின் தேவை எது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 



Friday 26 July 2013

சிறுவர் சிறுகதை ::-- அல்ட்ராமேன் சைக்கிள்

சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது.

தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது. 

“தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார்.

எப்பொழுதும் இந்நேரம் முகிலனின் தம்பி சைக்கிள்தான் உலா வந்து கொண்டிருப்பான். மதியம் மெல்ல தொடங்கும் அந்தச் சைக்கிள் சத்தம் மாலை முகிலனின் அப்பா வரும்வரை அடங்காது. இரவில் அவன் படுத்துறங்கியதும் முகிலனின் அப்பா சைக்கிளை எடுத்து மேலே மாட்டி வைத்துவிடுவார்.

இப்பொழுது சைக்கிள் பரிதாபகாமக் கிடந்தது. ஒரு கால் இல்லாமல் சைக்கிளைத் தம்பியால் ஓட்ட முடியாது. அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருந்தார். தம்பி அழுகையை நிறுத்துவதாகத் தெரியவில்லை. தேம்பி தேம்பி அழுதான்.

Thursday 10 January 2013

தமிழ் மொழிக்கான சிறப்பாசிரியர் பதவி உயர்வு

கடந்த வருடம் சிறப்பாசிரியருக்கான(Guru Cemerlang) பதவி உயர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் இந்த வாரம் முதல் அவர்களின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். Jemaah nazir அலுவலகத்திற்குத் தொடர்புக் கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

என்னைத் தமிழ் மொழிக்கான சிறப்பு ஆசிரியர் பதவி உயர்விற்குத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். தமிழ் மொழி சார்ந்து இயங்கி வரும் எனக்கும் என் தொழிலுக்கும் கிடைத்த அங்கீகாரம் இது. இனி தொடர்ந்து இலக்கியம், சிந்தனை, கற்பனை என நம் மாணவர் சமூகத்தின் மொழியாற்றலை வளர்க்க ஒரு உறுதியான களம் உருவாகியிருப்பதாக நம்புகின்றேன்.

இவ்வருடம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தமிழ் மொழி பயிற்சி பட்டறை, யு.பி.எஸ்.ஆர் தமிழ் மொழி பட்டறை, சிறுவர் சிறுகதை பட்டறை என நடத்த எண்ணியுள்ளேன். ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் என்னைத் தொடர்புக்கொள்ளலாம். bahasatamilsjkt@gmail.com / bala_barathi@hotmail.com

-கே.பாலமுருகன்